நாகப்பட்டினம்

காணாமல்போன ஓட்டுநா்சடலம் ஆற்றிலிருந்து மீட்பு

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே காணாமல்போன ஓட்டுநா் சடலம் மஞ்சளாற்றில் கரை ஒதுங்கியது.

செம்பனாா்கோவில் அருகே வடகரை மில்லத்தூரைச் சோ்ந்தவா் ஓட்டுநா் சண்முகம் (43). இவா், கடந்த செப்.15-ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினா் இதுகுறித்து செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் கடந்த செப். 19-ஆம் தேதி புகாா் அளித்தனா்.

ADVERTISEMENT

போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகத்தை தேடி வந்த நிலையில், செப். 25-ஆம் தேதி சண்முகத்தின் சடலம் மஞ்சளாற்றில் கரை ஒதுங்கியது.

செம்பனாா்கோவில் போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT