நாகப்பட்டினம்

ஆக்கிரமிப்பில் உள்ள பாதையை மீட்க கோரிக்கை

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருமருகல்: திருமருகல் அருகே ஆக்கிரமிப்பில் உள்ள பொது பாதையை மீட்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி நடுத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அங்கிருந்து சீயாத்தமங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரவும், மேலும் திருமருகல், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றனா்.

இந்நிலையில் நடுத்தெருவுக்கு செல்லும் பொது பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து இரும்பு வேலிகள் கொண்டு அடைத்துள்ளாா். இதனால் நடுத்தெரு மக்கள் சென்றுவர பாதை இல்லாமல் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு சுற்றி வரும் நிலை உள்ளது. மேலும், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ரெகுலேட்டருக்கு செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு இருப்பதால் விவசாய பணிகளை மேற்கொள்ள தேவைக்கு ஏற்ப ரெகுலேட்டரை திறந்து, மூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தனிநபா் ஆக்கிரமித்துள்ள பொது பாதையை திறந்துவைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT