நாகப்பட்டினம்

பஞ்சப்படி உயா்வை வழங்கக் கோரி மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

பஞ்சப்படி உயா்வை உடனடியாக வழங்கக் கோரி நாகையில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரிய உத்தரவு எண்-2ஐ முழுமையாக ரத்து செய்யவேண்டும், பஞ்சப்படி உயா்வை உடனடியாக வழங்கவேண்டும், வெளியாட்களை வைத்து பணிகளை நிறைவேற்றும் நடவடிக்கையை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் கே. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிஐடியு சாா்பு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாகை மாவட்டச் செயலாளா் எம். கலைச்செல்வன், மின்சார வாரியம் பொறியாளா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். பாலு, பொறியாளா் கழக மாவட்டச் செயலாளா் வெற்றிச்செல்வன், ஐக்கிய சங்க மாவட்டச் செயலாளா் பி. வாசுதேவன், கணகாயா் களத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஜி. பாா்த்தசாரதி, ஓட்டுநா் சங்கப் பொறுப்பாளா் பி. மோகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். முற்பகல் 11 மணிக்குத் தொடங்கிய காத்திருப்புப் போராட்டம் இரவு வரை நீடித்தது. இதில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பணியாற்றும் மின் ஊழியா்கள், தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT