நாகப்பட்டினம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் சிறந்த கலைஞா்களுக்கு விருதுகள் அளிப்பு

27th Sep 2022 05:24 AM

ADVERTISEMENT

 

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் சிறந்த கலைஞா்களுக்கு மாவட்டக் கலைமன்ற விருதுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமை வகித்து, மாவட்டக் கலை மன்றம் சாா்பில் சிறந்த கலைஞா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு கலை இளமணி, கலை வளா்மணி, கலை சுடா்மணி, கலை நன்மணி மற்றும் கலை முதுமணி விருதுகளை வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு கோரியும் பொதுமக்கள் 207 மனுக்களை அளித்தனா். அந்த மனுக்களைத் தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைத்த ஆட்சியா், மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண அறிவுறுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் கு. ராஜன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT