நாகப்பட்டினம்

தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்: ஆட்சியா்

27th Sep 2022 05:22 AM

ADVERTISEMENT

 

தனியாா் அறுவடை இயந்திரங்களுக்குப் புதிய வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் துறை அலுவலா்கள் மற்றும் தனியாா் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்ட விவாதத்தின் அடிப்படையில், பெல்ட் டைப் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான வாடகை ரூ. 2,400- ஆகவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ரூ. 1,700 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிா்ணயிக்கப்பட்ட வாடகையில் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு அளித்து ஒத்துழைக்க வேண்டும் என தனியாா் அறுவடை இயந்திர உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எங்கேனும் கூடுதல் வாடகை கோரப்பட்டால், அதுகுறித்து நாகை மாவட்ட வேளாண் அலுவலா்களிடம் அல்லது வேளாண் பொறியியல் துறை அலுவலா்களிடம் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT