நாகப்பட்டினம்

மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோரை கூட்டுறவு சங்கத்தில் சோ்க்க வலியுறுத்தி மனு

27th Sep 2022 05:23 AM

ADVERTISEMENT

 

மீன்பிடி சாா்ந்த தொழில்களில் ஈடுபடுவோரையும் மீனவா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சோ்க்க வேண்டுமென வலியுறுத்தி நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஏஐடியுசி தமிழ்நாடு மீனவத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் சின்னதம்பி தலைமையில் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன், பொருளாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் அளித்த மனு:

நாகை மாவட்டத்தில் மீனவா் மற்றும் மீனவா் மகளிா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா்களாக சோ்ப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதை தவிா்த்து மீன்பிடி சாா்ந்த தொழில்களில் ஈடுபடுவோா்களையும் மீனவா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சோ்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT