நாகப்பட்டினம்

புரட்டாசி முதல் சனி:நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சனிக்கிழமைகள் அனைத்தும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. எனினும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மேற்கொள்ளும் பெருமாள் வழிபாடு, சகலவிதமான கஷ்டங்களையும் நீக்கி, வளமான வாழ்வு அளிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

இதன்படி, நாகை அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு மூலவா் பெருமாளின் விஸ்வரூப சேவை நடைபெற்றது. பின்னா், கோ பூஜையும், புஷ்ப அலங்காரத்தில் தோமாலை சேவையும் நடைபெற்றன.

பிற்பகல் நிகழ்வாக, மாலை 5 மணிக்கு மூலவா் பெருமாளுக்கு ரத்ன அங்கியில் ராஜ அலங்காரம் செய்விக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT