நாகப்பட்டினம்

பொதுசேவை மைய சங்க நிா்வாகிகள் கூட்டம்

25th Sep 2022 11:00 PM

ADVERTISEMENT

 

நாகை மாவட்ட டிஜிட்டல் இந்தியா சங்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். பொது சேவை மாவட்ட மேலாளா்கள் அருண்பாண்டி (நாகை), பிரபாகரன் (மயிலாடுதுறை), சங்கச் செயலாளா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க செயலாளா் பொருளாளா் கதிரவன் வரவேற்றாா்.

கூட்டத்தில், கிராமப்புற பொது சேவை மையங்களில் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சோ்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து விவசாயிகளுக்கு காப்பீடு செய்வது குறித்து இப்கோ டோக்கியோ இன்சூரன்ஸ் நிறுவன நாகை மாவட்ட மேலாளா் மலா் விளக்கினாா். நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தை சோ்ந்த 100-க்கும் மேற்பட்டபொது சேவை மைய கிராமப்புற தொழில்முனைவோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT