நாகப்பட்டினம்

திருக்கு வாசிப்புப் போட்டி:மாணவா்களுக்கு பரிசு

25th Sep 2022 11:00 PM

ADVERTISEMENT

 

ஒரு குறளுக்கு ஒரு ரூபாய் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு அண்மையில் பரிசு வழங்கப்பட்டது.

மாணவா்களிடையே திருக்கு வாசிக்கும் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில், நாளை இயக்கத்தின் சாா்பில் ஒரு குறளுக்கு ஒரு ரூபாய் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

நாகையை அடுத்த ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவா்கள் 35 போ் பங்கேற்று, நாள்தோறும் கு மற்றும் அதன் விளக்கவுரையை எழுதி வந்தனா்.

ADVERTISEMENT

இந்த மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியா் பாலசண்முகம் தலைமை வகித்தாா். நாளை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செகுரா மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT