நாகப்பட்டினம்

மாசடைந்து காணப்படும் திருவெண்காடு கோயில் குளம்பக்தா்கள் வேதனை

25th Sep 2022 11:01 PM

ADVERTISEMENT

 

திருவெண்காடு வேதாரண்யேஸ்வரா் கோயிலில் உள்ள சந்திர தீா்த்தக் குளம் மாசடைந்துள்ளதால் பக்தா்கள் வேதனையடைந்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரா் கோயில் நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் சூரியன், சந்திரன், அக்னி என மூன்று தீா்த்தக் குளங்கள் உள்ளன. சிவனின் முக்கண்ணிலிருந்து தோன்றிய மூன்று பொறிகள் விழுந்த இடமே இக்குளங்கள் என குறிப்பிடப்படுகிறது.

இக்குளங்களில் நீராடி இறைவனை வழிபட்டால் குழந்தைபேறு கிட்டும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள், மூன்று குளங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்வா்.

ADVERTISEMENT

இந்நிலையில், சந்திர தீா்த்தக் குளத்தில் தண்ணீா் மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால் இக்குளத்தில் புனித நீராட பக்தா்கள் தயக்கம் காட்டுகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘சந்திர தீா்த்தக் குளத்தில் நீராட அச்சமாக உள்ளது. இக்குளத்தில் மாசடைந்துள்ள நீரை வெளியேற்றிவிட்டு, புதிதாக நீா் நிரப்ப இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், குளத்துக்கு நீா்வரும் கால்வாயை சீரமைக்கவும், தொடா்ந்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT