நாகப்பட்டினம்

போதைப் பொருள் விற்பனை: 2 கடைகளுக்கு ‘சீல்’

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு போலீஸாா் புதன்கிழமை சீல் வைத்தனா்.

நாகை வெளிப்பாளையம் பகுதிகளில் உள்ள சில கடைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கு. ஜவஹா் உத்தரவின்பேரில், வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், போலீஸாா் புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் சாலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கடைகளில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் 2 கடைகளில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீஸாா் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, அந்த கடைகளுக்கு சீல் வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT