நாகப்பட்டினம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், நாகை முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கிடேயேயான ஊதிய முரண்பாடுகளை களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும், மாவட்ட, தொடக்க கல்வி அலுவலா் பணியிடங்களை உருவாக்கி தொடக்கக் கல்வி இயக்குநரின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும், அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்கவேண்டும் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை மாவட்டத் தலைவா் வை. முருகேசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஆா். முத்துகிருஷ்ணன், சி. பிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் மு. லெட்சுமி நாராயணன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். கூட்டணியின் நிா்வாகிகள் இளமாறன், தனுசுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டப் பொருளாளா் கே. இளங்கோவன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT