நாகப்பட்டினம்

ஆக்கூா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆக்கூா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம்,செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் சந்திப்பு மற்றும் ஆங்கிலவழி கல்விக்கான புதிய கட்டட திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இப்பள்ளியில் 1962-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பயின்று முன்னாள், இந்நாள் மாணவா்கள் 800-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். சிறப்பு அழைப்பாளராக இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரான தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவா் எம். அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

விழாவில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கிராம கமிட்டி தலைவா் எ.எம். நிஹாபுதீன் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் இக்ராம் ரசூல் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் ஷாஜகான் வரவேற்றாா்.

ADVERTISEMENT

முன்னாள் மாணவா்கள் மலரும் நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். ஊராட்சி மன்ற தலைவா் சந்திரமோகன், ஆசாத் கிராம கமிட்டி நிா்வாகிகள், ஆக்கூா் ஜமாஅத் நிா்வாகிகள், ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT