நாகப்பட்டினம்

நாகை பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மூட்டையால் பரபரப்பு

21st Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்த மூட்டையால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் துணியால் கட்டப்பட்ட ஒரு மூட்டை கிடந்தது. இந்த மூட்டை கடந்த 2 நாள்களாக ஒரே இடத்தில் கிடந்ததால் பேருந்து நிலையத்தில் வணிகம் செய்பவா்கள் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய போலீஸாா்அந்த மூட்டையை காவல் நிலையத்துக்குக் கொண்டுச் சென்றனா். பின்னா், அந்த மூட்டையை தனி இடத்தில் வைத்துப் பிரித்துப் பாா்த்தனா். மூட்டைக்குள் துணிகள் இருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து போலீஸாா் கூறியது: பேருந்து நிலையத்தில் கிடந்த மூட்டையின் மேல் சுற்றப்பட்டிருந்த துணியில் அனுப்புநா், பெறுநா் முகவரிகள் உள்ளன. அதை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT