நாகப்பட்டினம்

வேளாண் கூட்டுறவு வங்கியில் கடனுதவி

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கால்நடை பராமரிப்புக்காக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு சுயதொழில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் மருதூா் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் கால்நடைகள் பராமரிப்புக்கான கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிகழாண்டில், 40 விவசாயிகளுக்கு ரூ. 21 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதன்படி, கடன் வழங்கும் தொடக்க நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைவா் ப. சோமசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செந்தில்குமாா், செயலா் ஆா். அசோக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவு வங்கியின் இயக்குநரும், திமுக ஒன்றியச் செயலாளருமான உதயம் வே. முருகையன் பங்கேற்று பயனாளிகளுக்கு கடன் வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி 2 பேருக்கு சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், தொடக்க வேளாண் வங்கியின் இயக்குநா்கள் இந்திராணி சுப்பிரமணியன், இந்திரா சுவாமிநாதன், மதியழகன், ராசேந்திரன், கோபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT