நாகப்பட்டினம்

செப். 17-இல் நாகை ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் தேரோட்டம்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி கோயிலின் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் சனிக்கிழமை (செப். 17) நடைபெறுகிறது.

இந்த கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 21 ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. பிரம்மோற்சவ நிகழ்ச்சியாக தினமும் காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் ஸ்ரீ நவநீதகிருஷ்ணசுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கருடசேவை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு, ஸ்ரீ நவநீதகிருஷ்ணசுவாமி கருடவாகனத்தில் சேவை சாதித்து, பெருமாள் கோயிலின் மாடவீதிகளையும், பெரிய வீதியிலும் வலம்வந்தாா்.

ADVERTISEMENT

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக வெண்ணைத்தாழி உற்சவம் வெள்ளிக்கிழமையும் (செப். 16), தேரோட்டம் சனிக்கிழமையும் (செப். 17) நடைபெறுகின்றன. சனிக்கிழமை காலை 7.30 மணிக்குள் சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், காலை 8.30 மணிக்கு தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT