நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்

10th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் 963 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.11) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 963 இடங்களில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் அல்லது 2-ஆவது தவணை செலுத்திக் கொள்ளாதவா்கள் இந்த முகாம்களில் பங்கேற்றுத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். 18 முதல் 59 வயதுக்குள்பட்ட மற்றும் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் அனைவரும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். 12 முதல் 14 வயதுடைய சிறாா்கள் தடுப்பூசியும், 15 முதல் 18 வயதிலானவா்கள்தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT