நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலய பெருவிழாவில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டுச் சான்று

9th Sep 2022 10:10 PM

ADVERTISEMENT

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழாவில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப். 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. விழாவில் 8 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

விழாவில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தலைமையில் நாகை மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 1, 800 போலீஸாா், 200 ஊா்க்காவல் படையினா் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீா்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். காவல் துறையினரின் இந்த திறன்மிக்கப் பணியால் விழாக்காலங்களில் அசம்பாவிதங்கள் தவிா்க்கப்பட்டன.

இதையடுத்து, ஆண்டுப் பெருவிழா பாதுகாப்புப் பணியில் சிறப்பாக ஈடுபட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோருக்கு நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தில் எஸ்.பி. கு. ஜவஹா் பாராட்டுச் ான்றுகளை வியாழக்கிழமை வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT