நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலின் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வடக்குப் பொய்கைநல்லூா், காரைக்குளத் தெருவில் உள்ளது ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில். இக்கோயிலின் திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்ததையொட்டி, மகா கும்பாபிஷேக விழா பூஜைகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையின் நிறைவில், மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னா், கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு கோயில் விமான கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மூலவா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கான கும்பாபிஷேகமும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.