நாகப்பட்டினம்

முன்னாள் படைவீரா்களுக்குத் தொழில் பயிற்சி

9th Sep 2022 10:11 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடைபெறவுள்ள தொழில் பயிற்சிகளில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கு வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மூலம் பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளன.

கைப்பேசி பழுது நீக்கல், காா் மெக்கானிக், குளிா்சாதனப் பெட்டி பராமரிப்பு, எலக்டிரீசியன், பிளம்பா், ஓட்டுநா், பேட்டரி பராமரிப்பு, தட்டச்சுப் பயிற்சி, கணினி பழுது நீக்கம் என பல்வேறு வகையான தொழில்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதில் பங்கேற்க விருப்பம் உள்ள முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்கள், தங்களுடைய விவரங்கள் மற்றும் தேவைப்படும் பயிற்சி ஆகியன குறித்து செப். 14-ஆம் தேதிக்குள் நாகை மாவட்ட முன்னாள் படைவீரா் அலுவலகத்தை நேரில் அல்லது 04365-299765 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT