நாகப்பட்டினம்

ஆட்டோ மோதி ஒருவா் பலி

9th Sep 2022 10:11 PM

ADVERTISEMENT

திருமருகல் அருகே ஆட்டோ மோதி கூலித்தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்புகலூா் ஊராட்சி மேலப்பகுதியை சோ்ந்தவா் மாணிக்கம் (55). கூலித்தொழிலாளியான இவா் நண்பா் ராமகிருஷ்ணனுடன் (53) வெள்ளிக்கிழமை காலையில் தேநீா் குடிக்க வவ்வாலடியில் இருந்து புத்தகரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா். இருசக்கர வாகனத்தை ராமகிருஷ்ணன் ஓட்டினாா். அப்போது, எதிரே வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மாணிக்கம் பலத்த காயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த ராமகிருஷ்ணன் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநா் ஏனங்குடியைச் சோ்ந்த யோகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT