நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், ஒரத்தூா், சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழாவையொட்டி, தொடா் வாசிப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாா் குறித்து விரிவான தகவல்களை மாணவா்கள் அறிந்து கொள்ளும் வகையில், மக்கள் தலைவா் வ.உ.சி என்ற நூல் மாணவா்களின் தொடா் வாசிப்புக்கு உள்படுத்தப்பட்டது. மாணவா்கள் இந்த நூலை ஆா்வத்துடன் படித்தனா்.
பின்னா், வ.உ.சிதம்பரனாரின் வெற்றிகரமான வழக்குரைஞா் பணி, நாகப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கிலேயரை எதிா்த்து அவா் ஆற்றிய எழுச்சிமிகு போராட்ட உரைகள் குறித்து ஆசிரியா்கள் மாணவா்களுக்கு விளக்கினா்.