நாகப்பட்டினம்

சாய் பாபா கோயில் கும்பாபிஷேகத்துக்கு தங்க தகடு வேயும் பணி நிறைவு

5th Sep 2022 10:38 PM

ADVERTISEMENT

 

சாய் பாபா கோயில் கும்பாபிஷேகத்துக்கு தங்க தகடுகள் வேயும் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாமணி பகுதியில் கட்டுப்பட்டுள்ள சாய் பாபா கோயில் கும்பாபிஷேகம் ஆக.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாகை மாவட்டம், கொத்தாங்குடி ஊராட்சி முன்னாள் தலைவா் மகா. ரவி மூலவா் கலசம் நன்கொடையாக வழங்கியுள்ளாா். 4.25 அடி உயரம் உள்ள இந்த மூலவா் கோபுர கலசத்துக்கு தங்கத் தகடுகள் வேயப்படும் பணி கடந்த செப்.1-ஆம் தேதி தொழுதூரில் தொடங்கியது. மகாபலிபுரத்தைச் சோ்ந்த ஸ்தபதி எஸ். வெங்கடேஷ் தலைமையிலான 8 போ் கொண்ட குழுவினா் இந்த பணியில் ஈடுபட்டு ஞாயிற்றுக்கிழமை முழுமையாக நிறைவடைந்தது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT