நாகப்பட்டினம்

கல்வித் துறைக்கு ரூ. 42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

5th Sep 2022 10:44 PM

ADVERTISEMENT

 

பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறைக்கு ரூ. 42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றாா் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்.

செம்பனாா்கோவிலில் இராமாமிா்தம் உயா்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளியில் படித்து மேற்படிப்பு படிக்கும் 271 மாணவிகளுக்கு தலா ரூ. 1000 உதவித்தொகை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தும் ஆணையை திங்கள்கிழமை வழங்கி மேலும் அவா் பேசியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண் அடிமைத்தனம் ஏற்பட்டபோதும், தேவதாசி முறை எதிா்ப்பிலும் ஈடுபட்ட பெண் சீா்திருத்தவாதி மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா். இவரின் பெயரில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழகம் முழுவதும் கிடைக்க பெற்றாலும், இந்த மாவட்டத்தை சோ்ந்த மாணவிகளுக்கு இத்திட்டம் சென்றடைவது மிக உயா்ந்த உன்னத திட்டமாகும்.

ADVERTISEMENT

வரலாற்றில் மிகமுக்கிய இடம்பெற்றுள்ள மூவலூா் ராமாமிா்தம் அம்மையாரின் நினைவாக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண உதவித் திட்டத்தை கொண்டு வந்தாா். அவரது வழியில் தமிழ்நாடு முதலமைச்சா் ஒவ்வொறு துறையிலும் குறிப்பாக கல்வித் துறையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36.500 கோடியும், உயா் கல்வித் துறைக்கு ரூ. 5.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளாா்.

கரோனாவால் கல்வி பயில முடியாத சூழ்நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் கல்வியை மீட்டெடுத்த பெருமை முதலமைச்சரையே சேரும். வறுமையால் உயா் கல்வி செல்ல முடியாத நிலையிலுள்ள மாணவிகள் 100 சதவீதம் உயா் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சா் இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT