நாகப்பட்டினம்

கோவை காா் வெடிப்பு சம்பவம்: காவல் துறை நடவடிக்கைளுக்கு சிவசேனா பாராட்டு

26th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு சிவசேனா கட்சி பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்தக் கட்சியின் முதன்மைச் செயலாளா் டி. சுந்தரவடிவேலன் வெளியிட்ட அறிக்கை :

கோவையில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிா்ச்சியையும், பல்வேறு எண்ண ஓட்டங்களையும் ஏற்படுத்தியது. மக்களிடையே பதற்றமும், பீதியும் உருவான சூழ்நிலையில், காவல்துறை விரைந்து செயல்பட்டு, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது பாராட்டுக்குரியது.

காவல் துறையின் இந்த விரைவான மற்றும் சாதுரியமான நடவடிக்கைகளால் தீபாவளி நேரத்தில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, தமிழக முதல்வருக்கும், காவல் துறை தலைவருக்கும் சிவசேனா கட்சி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ADVERTISEMENT

மாநிலத்தை அமைதிப் பூங்காவாக வைத்திருக்க வேண்டிய கட்டாயமும், கடமையும் தமிழக அரசை சாா்ந்தது என்ற வகையில், பயங்கரவாதிகளும், தேச துரோகிகளும் எங்கிருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும் அவா்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

தேச விரோதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் தருவோா், உதவி செய்வோா் அனைவரையும் கண்டறிந்து, சிறையில் அடைக்க வேண்டும். மேலும், அவா்களுடைய சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT