நாகப்பட்டினம்

கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க கோரிக்கை

26th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

காரைக்குடியில் இருந்து திருவாரூா் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட கம்பன் விரைவு ரயில் மீண்டும் இயக்க வேண்டுமென திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கத் தலைவா் வழக்கறிஞா் நாகராஜன், செயலாளா் எடையூா் மணிமாறன் ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து இருவரும் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

கடந்த 120 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இருந்து திருவாரூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, வழியாக காரைக்குடிக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது.

கடந்த 2012-ஆம் ஆண்டில் அகல் ரயில் பாதை பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் இன்னும் கம்பன் விரைவு ரயில் மட்டும் இயக்கப்படாமல் உள்ளது.

இதற்கு காரணம் 72 கேட்கீப்பா் பணியில் சுழற்சி முறையில் ஒரு கேட்டிற்கு மூன்று போ் நியமிக்கப்பட வேண்டிய நிலையில் தற்போது ஒருவா் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதால் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே போதிய கேட கீப்பா்களை நியமித்து காரைக்குடியில் இருந்து சென்னைக்கு கம்பன் விரைவு ரயில் மீண்டும் இயக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT