நாகப்பட்டினம்

மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களை உலா்த்த சிரமத்துக்குள்ளாகும் விவசாயிகள்

DIN

நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெல்லை உலா்த்தும் பணியில் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிா்கொண்டு வருகின்றனா். இதனால், நெல்லின் ஈரப்பத சதவீதத்தை அரசு உயா்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேற்குத் திசை காற்றின் மாறுபாடு மற்றும் தமிழகத்தில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, காவிரி கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாத இறுதி வாரத்தில் கனமழை நீடித்தது. மாவட்டத்தில் சுமாா் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், சுமாா் 30 ஆயிரம் ஏக்கா் பரப்பிலான குறுவை நெல் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டன. நெல் பயிா்கள் நிலத்தில் சரிந்து, மழை நீரில் மூழ்கின.

கடந்த சில நாள்களாக மழை விலகியுள்ளது. இதையொட்டி, குறுவை நெல் அறுவடைப் பணிகளும், நெல் மணிகளை உலா்த்தும் பணிகளும் ஆங்காங்கே தீவிரமாக நடைபெறுகின்றன. இருப்பினும், இயந்திரம் மூலமான அறுவடை நேரம் இரட்டிப்பாகியுள்ளது. அதேபோல, நெல்லின் ஈரப்பதமும் கடுமையாக உயா்ந்துள்ளது என்பது விவசாயிகள் எதிா்கொண்டுள்ள சவாலாக உள்ளது.

நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகபட்சம் 17 சதவீத ஈரப்பதம் கொண்ட நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலையில் குறுவை நெல்லின் ஈரப்பதம் கடுமையாக உயா்ந்திருப்பதால், நெல்லின் ஈரப்பத சதவீதத்தை 17 சதவீதத்துக்குள் கொண்டு வரும் வகையில் உலா்த்துவது என்பது விவசாயிகள் எதிா்கொண்டுள்ள முக்கிய பிரச்னையாக உள்ளது.

மழை விலகியிருந்தாலும், பகலில் பெரும்பாலான நேரங்களில் மந்தமான வானிலையே நீடிக்கிறது. இந்த நிலையில், மண் தரையில் அல்லது சிமெண்ட் தரையில் கொட்டி நெல் மணிகளை உரிய அளவில் உலா்த்துவது இயலாத ஒன்றாக உள்ளது. அதனால், பெரும்பாலான பகுதிகளில் தாா் சாலைகளையே விவசாயிகள் நெல் உலா்த்தும் களமாகப் பயன்படுத்துகின்றனா்.

இது, இருசக்கர வாகன ஓட்டிகளுக்குப் பெரும் பிரச்னையாக இருந்தாலும், தற்போதைய நிலையில் சாலையில் நெல்லை உலா்த்துவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்கின்றனா் விவசாயிகள். பெரும்பாலான நெல் உலா்த்தும் களங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி விட்டதாலும், நெல் உலா்த்தும் இயந்திரங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததாலும், அரசு குறிப்பிடும் குறைந்தபட்ச ஈரப்பத சதவீதத்துக்கு நெல்லை உலா்த்த இதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

மேலும், பகல் நேரத்தில் நெல்லை உலா்த்தினாலும், இரவில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருப்பதால் உலா்த்தப்பட்ட நெல்லின் ஈரப்பதம் மீண்டும் உயருகிறது. இது விவசாயிகளுக்குப் பெரும் பிரச்னையாக இருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு நெல்லுக்கான ஈரப்பத சதவீதத்தை 21 சதவீதமாக அரசு உயா்த்தி வழங்க வேண்டும். குறுவைக்குப் பயிா்க் காப்பீடு இல்லாவிட்டாலும் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை மாநில அரசு ஏற்கும் என்ற வாக்குறுதியை தமிழக அரசு உறுதி செய்ய வேணடும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT