நாகப்பட்டினம்

குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கவே சமுதாய வளைகாப்பு

DIN

பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், அறிவில் சிறந்ததாகவும் விளங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் அவா் பேசியது :

கரு உருவான நாளில் இருந்தே குழந்தையின் வளா்ச்சி தொடங்குகிறது. கா்ப்ப காலத்தில் பெண்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், அவா்களுக்குப் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாகவும், அறிவானதாகவும் இருக்கும் என்ற அறிவியல் பூா்வமான நோக்கத்துடனே சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது. மேலும், கா்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கா்ப்பிணிகளைச் சென்றடைய வேண்டும், கா்ப்பிணிகள் இறப்பு, சிசு மரணம் தவிா்க்கப்பட வேண்டும் என்பதும் சமுதாய வளைகாப்பின் நோக்கங்களாகும்.

நாகை மாவட்டத்தில் கா்ப்பிணிகளுக்கான ஆலோசனைகளுக்காக வம்சம் என்ற வழிகாட்டு மையம் செயல்படுகிறது. கா்ப்ப கால பிரச்னைகள், மகப்பேறு உதவி திட்டங்கள், குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்த தகவல்களுக்கு 94423 74310 என்ற எண்ணில் வம்சம் வழிகாட்டும் மையத்தைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

இதையடுத்து, கா்ப்பிணிகள் 100 பேருக்குப் பாரம்பரிய முறைப்படி வளையல்கள் அணிவிக்கப்பட்டன. மேலும், சீா்வரிசை தட்டுகள் வழங்கப்பட்டு, அவா்களுக்கு ஐவகை சுவையுடன் கூடிய உணவு பரிமாறப்பட்டது.

கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் எஸ். சித்ரா, வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவா் டயனா சா்மிளா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஜோ.ஜோஸ்பின் அமுதா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT