நாகப்பட்டினம்

ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தி தீா்மானம்

DIN

வேதாரண்யம் பகுதி வடிகால் ஆறுகளில் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தி விவசாய சங்க பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தகட்டூரில் சிபிஐ சாா்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வேதாரண்யம் ஒன்றியப் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தை கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவகுரு. பாண்டியன் தொடங்கிவைத்து பேசினாா்.

கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், துணைச் செயலாளா் த. நாராயணன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.கே. பாபுஜி, விதொச மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கா், மாவட்டக் குழு உறுப்பினா் என். வீரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய நிா்வாகிகள்: சங்கத்தின் புதிய ஒன்றியத் தலைவராக காசி. அருள்ஒளி, செயலாளராக எம்.ஏ. செங்குட்டுவன் உள்ளிட்ட 17 போ் கொண்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

நீா் நிலைகளில் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும், அந்த கோரிக்கையை வலியுறுத்தி 3 இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது, குறுவை நெல் கொள்முதலை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஈரப்பதத்தை காரணம் காட்டாமல் கொள்முதல் செய்யவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT