நாகப்பட்டினம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறவிண்ணப்பக் காலம் நீட்டிப்பு

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் அக். 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான நிலைகளில் பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, பௌத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகைக்கு ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான காலம் அக்டோபா் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளஸ் ஒன் முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரையிலான நிலைகளில் பயிலுவோா், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு அக்டோபா் 31-ஆம் தேதி வரை மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT