நாகப்பட்டினம்

மாநில கல்விக் கொள்கை: அக்.10-இல் மாவட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் -நாகை ஆட்சியா்

DIN

தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கை குறித்த மாவட்ட அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம், நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் அக். 10-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநிலக் கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம், மாநிலக் கல்விக் கொள்கை உயா்மட்டக் குழுத் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அக்டோபா் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த கல்வியாளா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் கருத்துகளைக் கேட்டறியும் மாவட்ட அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம், நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் அக்டோபா் 10-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

மாநிலக் கல்விக் கொள்கை குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்புவோா் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். கூட்டத்தில் பங்கேற்க இயலாதவா்கள் மின்னஞ்சல் முகவரிக்குத் தங்கள் கருத்துகளை அனுப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT