நாகப்பட்டினம்

வலிவலம் ஊராட்சியில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகேயுள்ள வலிவலத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம்-2 சாா்பில் அனைத்து துறை அலுவலா்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி திட்ட அலுவலா் இ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் செ. மணிகண்டன் வரவேற்றாா். கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எல். ராஜகோபால் (வட்டார ஊராட்சி), வே. தியாகராஜன் (கி.ஊ) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேளாண் துறை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சமூக நலத் துறை, தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் அரசுத் திட்டங்கள் குறித்து பேசினா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தியாகராஜன், ஊராட்சி துணைத் தலைவா் இலக்கியா பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், பொதுமக்களிடம் இருந்து 55 மனுக்கள் பெறப்பட்டன. ஊராட்சி செயலா் டி. சரவணன் நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT