நாகப்பட்டினம்

புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமருகல் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக திட்டச்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் சாா்பு ஆய்வாளா் சுரேஷ்ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு துறை அலுவலா் டேனியல், சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் டென்னிசன், வீரப்பிள்ளை ஆகியோா் திருமருகல் பகுதி கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பன்னீா்செல்வம் (65) என்பவரின் கடையில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து, அக்கடைக்கு சீல்வைக்கப்பட்டு, கடையில் வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT