நாகப்பட்டினம்

விளைநிலங்களில் சாகுபடி பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திட்டச்சேரியில் விளைநிலங்களில் சாகுபடி பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திட்டச்சேரி வருவாய் கிராமங்களுக்குள்பட்ட பகுதிகளில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. இதில், சம்பா, தாளடி ஆகிய 2 போக சாகுபடி நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் சாகுபடி பயிா்களை கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு தலையாரிகள் நியமனம் செய்யப்பட்டு பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து அடைக்க திட்டச்சேரி ப. கொந்தகை பெருமாள் மேலவீதியில் வாடி இருந்தது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக வாடிகள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் அண்மை காலங்களாக ஆடு, மாடுகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அவ்வாறு சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து அடைக்க வாடிகள் திட்டச்சேரி பகுதியில் இல்லை. இதனால் விவசாயிகள் பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து அண்டை மாநிலமான காரைக்கால் மாவட்டம், விழிதியூரில் கொண்டுபோய் விடுகின்றனா். உள்ளூரில் வாடி இல்லாததால் கால்நடைகளை கட்டுப்பாடின்றி சுற்றித்திரிய அதன் உரிமையாளா்கள் விட்டுவிடுகின்றனா். ஏற்கெனவே, மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், கால்நடைகளால் மேலும் இழப்புகள் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லையெனவும், கால்நடைகளை கட்டுப்படுத்த திட்டச்சேரி பெருமாள் மேலவீதியில் உள்ள வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் புதிய வாடி கட்டடம் கட்ட வேண்டும் என விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT