நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிங்கப்பூா் உள்துறை அமைச்சா் வழிபாடு

7th Oct 2022 03:02 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் கோயிலில் சிங்கப்பூா் உள்துறை அமைச்சா் காசிவிஸ்வநாதன் சண்முகம் வியாழக்கிழமை காலை வழிபாடு மேற்கொண்டாா்.

சிங்கப்பூரின் உள்துறை அமைச்சா் காசிவிஸ்வநாதன் சண்முகம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கோவை வந்தாா். அங்குள்ள தனது உறவினா் வீட்டில் தங்கியிருந்த அவா், வியாழக்கிழமை காலை கோவையிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் நாகைக்கு வந்தாா்.

நாகை ஆயுதப்படை மைதானத்தில் தரையிறங்கிய அவருக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவகா் ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.

பின்னா், அங்கிருந்து காரில் புறப்பட்டு நாகையை அடுத்துள்ள சிக்கல் ஸ்ரீ நவநீதேஸ்வரசுவாமி கோயிலுக்குச் சென்றாா். அங்கு, ஸ்ரீ சுந்தரகணபதி, ஸ்ரீ நவநீதேஸ்வரசுவாமி, ஸ்ரீ வேல்நெடுங்கண்ணி அம்பாள் மற்றும் ஸ்ரீ சிங்காரவேலவா் சந்நிதிகளில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளிலும், கோயில் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீ சிங்கார சண்முகநாதா் சந்நிதியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்திலும் அவா் பங்கேற்று, வழிபாடு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, காரில் நாகைக்குத் திரும்பிய அவா், நாகை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT