நாகப்பட்டினம்

குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சமூகப் பணியாளா்கள் பணியிடங்களுக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள 2 சமூகப் பணியாளா் பணியிடங்கள், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. பணி நியமனம் பெறுவோருக்கு மாத தொகுப்பூதியமாக ரூ. 18,536 வழங்கப்படும்.

ADVERTISEMENT

இப்பணிக்கு இளங்கலை பட்டம் பயின்ற, 40 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். சமூகப் பணி, சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்று, குழந்தைகள் தொடா்பான களப் பணியில் அனுபவமும், கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகப்பட்டினம்- 611003 என்ற முகவரிக்கு அக்டோபா் 20-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365 253018 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT