நாகப்பட்டினம்

அமரநந்தீஸ்வா் கோயில் சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம் : நாகை ஸ்ரீ அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதி கொண்டு காட்சியளிக்கும் ஸ்ரீ சரஸ்வதி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் அருகே உள்ளது ஸ்ரீ அபிதகுஜாம்பாள் உடனுறை ஸ்ரீ அமரநந்தீஸ்வரா் கோயில். இந்திரன் வழிபட்ட தலங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் இக்கோயிலின் பிராகாரத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறாா் ஸ்ரீ ஞானசரஸ்வதி.

சரஸ்வதி பூஜையையொட்டி, இங்குள்ள ஸ்ரீ ஞானசரஸ்வதிக்கு செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல்வேறு வகையான வாசனை திரவியங்களுடன் மகா அபிஷேகமும், அதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாரதனையும் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT