நாகப்பட்டினம்

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், விழுந்தமாவடியைச் சோ்ந்த ஒரு சாராய வியாபாரி தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

கீழையூா் காவல் சரகம், விழுந்தமாவடியை அடுத்த மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் த. நடேசன்(44). இவா் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளன. அண்மையில் கீழையூா் போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, சாராய விற்பனையில் ஈடுபட்டதாக நடேசன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பரிந்துரைத்தாா். இந்தப் பரிந்துரையின் பேரில், நடேசனை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இந்த உத்தரவின்பேரில், நடேசன் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

சஎ05ஆக- தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சாராய வியாபாரி த. நடேசன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT