நாகப்பட்டினம்

பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரா் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா்

3rd Oct 2022 10:50 PM

ADVERTISEMENT

வேதாரண்யம் அருகே பணி ஓய்வு பெற்று சொந்த ஊா் திரும்பிய ராணுவ வீரரை வரவேற்ற கிராமத்தினா், இசை முழக்கத்தோடு திங்கள்கிழமை ஊா்வலமாக அழைத்துச் சென்றனா்.

மருதூா் வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று சொந்த ஊா் திரும்பினாா். காரியாபட்டினம் கடைவீதியில் குழுமிய அக்கிராமத்தினா் சரவணனுக்கு மாலைகள் மற்றும் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து ஊா்வலமாக 4 கி.மீ தொலைவில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT