நாகப்பட்டினம்

கடலில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

3rd Oct 2022 10:49 PM

ADVERTISEMENT

நாகை, கீச்சாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா் ஒருவா் கடலில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நாகை, கீச்சாங்குப்பம், காளியம்மன்கோயில் நடுத்தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் கௌசிகன் (14). கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்புப் படித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது இரு நண்பா்களுடன் சோ்ந்து கல்லாறு கடலில் இறங்கி விளையாடியுள்ளாா்.

அப்போது, 3 பேரும் கடல் அலையில் சிக்கியுள்ளனா். இதைக் கண்ட அருகிலிருந்தவா்கள் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு, 2 பேரை கரை சோ்த்தனா். ஆனால், கௌசிகனை மீட்க இயலவில்லை. இந்த நிலையில், கடலில் மூழ்கி இறந்த கௌசிகனின் சடலம் கல்லாறு கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரை ஒதுங்கியது. இதுகுறித்து நாகை கடலோரக் காவல் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT