நாகப்பட்டினம்

வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

3rd Oct 2022 10:50 PM

ADVERTISEMENT

திருக்குவளை வீட்டின் கதவை உடைத்து மா்ம நபா்கள் பணம் மற்றும் தங்க மோதிரங்களை திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

வலிவலத்தைச் சோ்ந்தவா் மாதவன். இவா் குடும்பத்துடன் செப்.29-ஆம் தேதி சென்னை சென்றுவிட்டு திங்கள்கிழமை ஊருக்கு திரும்பினாா். வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம், 2 தங்க மோதிரம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, வலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தொடா்ந்து, நாகையிலிருந்து கைரேகை நிபுணா்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT