நாகப்பட்டினம்

தூய்மையான நகரங்கள் பட்டியலில் தலைஞாயிறு பேரூராட்சி மாநிலத்தில் முதலிடம்

3rd Oct 2022 10:50 PM

ADVERTISEMENT

தூய்மையான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் நாகை மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சி முதலிடம் பெற்றுள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் செயல்பாடு தொடா்பாக மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இந்திய நகரங்களில் ஸ்வச் சா்வேக்ஷன் எனும் தூய்மை நகர கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. நிகழாண்டு (2022) நடைபெற்ற கணக்கெடுப்பு முடிவை குடியரசு தலைவரால் புதுதில்லியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய நகரங்கள் பிரிவில் தலைஞாயிறு பேரூராட்சி தமிழ்நாட்டில் முதலிடமும், தென்னிந்திய அளவில் முதல் 10 இடங்களில் 9-ஆமிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து, பேரூராட்சித் தலைவா் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைஞாயிறு பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் அகிலா, ஓட்டுநா்கள் சுரேஷ், அபிஷேக், கோபி மற்றும் தூய்மைப் பணியாளா்கள் நடனம் ஆடி கொண்டாடினா். தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் அலமேலு, அறிவு, நிலா, சுகிா்தா மற்றும் கணினி இயக்குபவா் சௌந்தா் ஆகியோருக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகனுக்கு, மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வாழ்த்து தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT