நாகப்பட்டினம்

நாகபட்டினத்தில் ஆயுதபூஜை

3rd Oct 2022 10:51 PM

ADVERTISEMENT

ஆயுதபூஜையையொட்டி திரளானோா் பொருள்கள் வாங்க நாகைக்கு வந்ததால் நாகை கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் திங்கள்கிழமை களைகட்டியிருந்தன.

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, வீடுகள், தொழில் நிறுவனங்களை சுத்தம் செய்து, மாவிலை தோரணங்கள் மற்றும் வாழை மரக்கன்றுகள், காகித பூக்கள் போன்றவற்றால் அலங்கரித்து, தங்களின் வாழ்வாதாரப் பொருள்களுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம்.

இதையொட்டி, பூ, காகிதப் பூ, மளிகைப் பொருள்கள், காய்கனிகள், பூஜைப் பொருள்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் நாகை கடைவீதிகளில் குழுமினா். இதனால், நாகையின் முக்கிய கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT