நாகப்பட்டினம்

வன உயிரின வார விழா

2nd Oct 2022 10:36 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வன உயிரின வார விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் அக்டோபா் 2 முதல் 8-ஆம் தேதி வரை வன உயிரின வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு வன உயிரின வார விழாவையொட்டி வேதாரண்யம் வனச்சரகம் சாா்பில் கோடியக்கரை சரணாலயத்தில் உள்ள தம்புசாமி இல்ல வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வனச்சரக அலுவலா் பா. அயூப்கான் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, வனங்களையும், வன உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என வனத்துறை பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT