நாகப்பட்டினம்

நாகை கடற்கரையில் இன்று கலைநிகழ்ச்சிகள்

2nd Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

காந்தி ஜயந்தியையொட்டி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள், நாகை புதிய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 2) மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றன.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மூலம் நடைபெறும் விழாவில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்துகின்றனா்.

பொதுமக்கள் திரளாகப் பங்கற்று, போதைப் பொருள்களுக்கு எதிராக ஒன்றுபட விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT