நாகப்பட்டினம்

காந்தி ஜெயந்தி: நாகை, மயிலாடுதுறையில் சிலை, உருவப் படத்துக்கு மரியாதை

2nd Oct 2022 10:35 PM

ADVERTISEMENT

 

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் காந்தி ஜெயந்தியையொட்டி, அவரது சிலை மற்றும் உருவப் படங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மருத்துவக் கல்லூரி முதன்மையா் விஸ்வநாதன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காங்கிரஸ் மாவட்ட மாணவா் பிரிவு சாா்பில், கட்சி அலுவலகத்தில் காந்தி சிலைக்கும், காமராஜரின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. மாணவா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கோபிநாத், நகரத் தலைவா் உதயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மக்கள் முன்னேற்ற பொதுநலச் சங்கத்தின் சாா்பில் அதன் மாநில தலைவா் என். விஜயராகவன் தலைமையில் காந்தி, காமராஜா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT