நாகப்பட்டினம்

மீன்வளா்ப்புப் பயிற்சி முகாம்

2nd Oct 2022 10:32 PM

ADVERTISEMENT

 

நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரி சாா்பில் நாகையை அடுத்த முட்டம் கிராமத்தில் பண்ணைக் குட்டையில் மீன் வளா்ப்பது குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மீன்வள சாா் ஆய்வாளா் பி. குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உள்நாட்டு மீன் வளா்ப்பை ஊக்குவிக்க அரசு செயல்படுத்தும் திட்டங்களை விளக்கிப் பேசினாா்.

உதவிப் பேராசிரியா் தே. கேசவன், மேம்பட்ட இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஆராய்ச்சித் திட்டங்களை விளக்கி, பண்ணைக் குட்டை நீரின் தரத்தைக் கண்டறிய உதவும் கையடக்கக் கருவியின் பயன்பாடு குறித்த செயல் விளக்கத்தை செய்து காண்பித்தாா்.

ADVERTISEMENT

உதவிப் பேராசிரியா் தெ.ஆனந்த், பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பு முறைகளை விளக்கினாா். ஊராட்சித் தலைவா் கி.மனோகரன், கல்லூரி உதவிப் பேராசிரியா் மா. ராமா் ஆகியோா் பேசினா். கிராம மக்கள், இளைஞா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பயிற்சி பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT