நாகப்பட்டினம்

நாகை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் வழிபாடு

1st Oct 2022 10:13 PM

ADVERTISEMENT

நாகை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி மாத 2-ஆவது சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் திரளானோா் பங்கேற்றனா்.

நாகை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக, காலை 5 மணிக்கு மூலவா் பெருமாளின் விஸ்வரூப சேவை நடைபெற்றது. பின்னா், கோ பூஜை, புஷ்ப அலங்காரத்தில் தோமாலை சேவை நடைபெற்றன.

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT