நாகப்பட்டினம்

பூம்புகாா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 3 போ் பலி

1st Oct 2022 10:15 PM

ADVERTISEMENT

பூம்புகாா் அருகே வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.

பூம்புகாா் அருகேயுள்ள புதுகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பூபாலன் மகன் நவீன்(17). ஏழுமலை மகன் கணபதி (24) இருவரும் புதுகுப்பத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தருமகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்தனா். சாவடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சத்தியராஜ் (25) என்பவா் தருமகுளத்திலிருந்து சாவடிகுப்பம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

நெய்தவாசல் சிராவெட்டி அய்யனாா் கோயில் அருகே முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல முயன்றபோது இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த சத்தியராஜ் திருவெண்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நவீன் உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் திருவாருா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணபதி சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து பூம்புகாா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT