நாகப்பட்டினம்

தரங்கம்பாடி பேரூராட்சி கூட்டம்

1st Oct 2022 10:14 PM

ADVERTISEMENT

தரங்கம்பாடி பேரூராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவா் சுகுணா சங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் பூபதி. கமலக்கண்ணன் வரவேற்றாா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் ஆனந்தி, ஜோன்செல்லப்பா, அனாா்கலி, சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று தங்கள் வாா்டுகளின் தேவைகள் குறித்து பேசினா். குறிப்பாக சாலை சீரமைப்பு, கொசுமருந்து அடித்தல், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துதல், குடிநீா் மற்றும் நாய்த் தொல்லைகளை கட்டுப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பின்னா் பேசிய, தலைவா் சுகுணா சங்கா், ‘இப்பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் சாலை மற்றும் குடிநீா் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும்’ என்றாா். நிறைவாக சுகாதார ஆய்வாளா் இளங்கோ நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT